பாலிவுட் நடிகர் சல்மான் கான், இன்று சிக்கந்தர் பட ப்ரமோஷன் விழாவில் தென்னந்திய நடிகர்களுக்கு மறைமுக கோரிக்கை ஒன்றை வைத்தார். அதாவது, சல்மான் கான் கூறுகையில், ரஜினி, சிரஞ்சீவி, சூர்யா, ராம்சரண் ஆகியோரின் படங்கள் இங்கு நன்றாக ஓடுகிறது. எங்களின் படங்களை பார்க்க, ரசிகர்களுக்கு நடிகர்கள் சொல்வதில்லை. நான் கூட அவர்களின் ஊர்களுக்கு சென்றால், "பாய்., பாய்" என அன்புடன் அழைக்கின்றனர். ஆனால், திரையரங்கு பக்கம் யாரும் வருவதில்லை என பேசினார்.