காட்பாடியில் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், "அமலாக்கத்துறையினர் வந்தார்கள். ஒன்றும் இல்லை என எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள். எனது வீட்டில் நடந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என அமலாக்த்துறைஅமலாக்கத்துறை அதிகாரிகள் கூறிவிட்டனர்" என்று பதிலளித்துள்ளார்.