மாடர்ன் டிரஸ் அணிந்த மனைவியை கொன்ற கணவன்

45535பார்த்தது
மாடர்ன் டிரஸ் அணிந்த மனைவியை கொன்ற கணவன்
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜீவன் (25). இவரது மனைவி ஜோதி (22). இருவரும் காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். இதனிடையே, ஜோதி மாடர்ன் உடை அணிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவர் கணவர் ஜீவன் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். கடந்த டிச.30ம் தேதி மனைவியை வெளியே அழைத்துச் சென்று வனப்பகுதியில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் ஜீவன் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி