திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சாலைகள், நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் 24 மணி நேரத்திற்குள் அதை அகற்ற வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் கெடு விதித்தது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் சாலை போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறாக இருக்கும் பொருட்கள் மேற்கூரைகள் ஆகியவற்றை 24 மணி நேரத்திற்குள் அகற்றவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் தெருவில் இருந்து பணிகள் தொடங்கியுள்ளன.