திமுக - விசிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை - திருமா

67பார்த்தது
திமுக - விசிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை - திருமா
விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் அழைத்து திருமாவளவன் அழைப்பு விடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேர்தலுடன் இந்த மாநாட்டை முடிச்சு போட வேண்டாம். இது தமிழக மக்களின் நலனுக்காக நடத்தக்கூடிய ஒரு மாநாடாகும். திமுக சார்பில் 2 பேர் மாநாட்டில் பங்கேற்பார்கள் என முதல்வர் உறுதியளித்துள்ளார். திமுக மற்றும் விசிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி