அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (டிச.15) நடைபெற உள்ளது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், “அதிமுக-வில் சலசலப்பு, கருத்து வேறுபாடு உள்ளதாக சிலர் உண்மைக்கு புறம்பாக கூறிவருகின்றனர். யாரை நம்பியும் அதிமுக இல்லை. தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.ஒற்றுமைதான் அதிமுக-வின் பலம். நூறு கருணாநிதி வந்தாலும் அதிமுக-வை ஒன்றும் செய்யமுடியாது” என்றார்.