தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசுதா (42 வயது). கடந்த சில மாதங்களாக இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வத்தலகுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது, ஜெயசுதா உயிரிழந்தார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.