பின்னதேவன்பட்டியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி என்பவர் பெரியகுளம் தண்டுபாளையத்தைச் சேர்ந்த அப்பாஸ், அகமதுபஷீர், அப்துல்ராஜ், அமீர், ரமேஷ்பாபு ஆகியோர் வடவீரநாயகன்பட்டியில் உள்ள பிரச்சனைக்குரிய நிலத்தை கோர்ட் உத்தரவை மறைத்து, என்னிடம் முன்தொகையாக ரூ. 43 லட்சத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். பிறகு போலீசார் அப்பாஸ், ரமேஷ்பாபுவை கைது செய்து இன்று (செப் 20) விசாரணை செய்தனர்.