தேனி மாவட்டம், குச்சனூர் காந்திஜி தெரு பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி (27 வயது). இவருக்கு புலிகுத்தி கிராமத்தின் மலையடிவாரத்தில் தென்னந்தோப்பு உள்ளது. அதில், சோலார் பேனல் மற்றும் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சி வந்துள்ளது. சோலார் பேனல் பழுதானது. இதனால் தனிச் சர்வீஸ் பெற்று தண்ணீரை பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்னை மரங்களுக்கு தண்ணீர் எடுத்து விட்டு பின் மாலையில் வீட்டிற்குச் சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபொழுது ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள 20 சோலார் பேனல்கள் திருடுபோயிருந்தன. இதுகுறித்து வளர்மதி சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சின்னமனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சோலார் பேனல்களை திருடிச் சென்ற மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.