தேனி மாவட்டம் கூடலூர் இந்திரா காலனி சேர்ந்தவர் கிரண் வயது 26. கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவர் அதே பகுதியில் சரண்யா என்பவர் வளர்க்கும் வளர்ப்பு நாய் தன்னைப் பார்த்து குறைத்ததாலும், தாயை 6 மாதங்களுக்கு முன்பு கடித்ததாலும் அந்த நாயை கொடூரமாக படிக்கட்டில் அடித்து, துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.
இதை கண்டு ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தட்டிக் கேட்டதற்கு, அவர்களை கொலை செய்து விடுவேன் என்று கிரண் மிரட்டி உள்ளார். இது குறித்த அந்தப் பகுதி மக்கள் கூடலூர் வடக்கு போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் கிரண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.