தேனியில் போலி பத்திரத்திற்கு பட்டா கேட்டு தேனி - அல்லிநகரம் நகராட்சி நில அளவையரை மிரட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜ்குமார், கர்ணன், அரசகுமார் ஆகியோர் அல்லிநகரத்தில் உள்ள நிலத்திற்கு முறையாக பத்திரப்பதிவு செய்யாமல் அதற்கு பட்டா வழங்கக்கோரி தேனி - அல்லிநகரம் நகராட்சி நில அளவையரை மிரட்டியதாக கூறப்படுகிறது மேலும் அடிக்கடி சென்று மிரட்டி பணம் கேட்டு வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் மிரட்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூன்று நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்