உத்தரப்பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கஞ்சதுந்த்வாரா பகுதியில் புதன்கிழமை இரவு, பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மஹா கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போது டிராக்டர் டிராலி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 34 பேர் காயமடைந்த நிலையில், அவர்களை அப்பகுதியினர் உடனடியாக கஞ்சதுந்த்வாரா மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் பார்தி தெரிவித்துள்ளார்.