மாம்பழத்தின் தோல் பகுதியை வெட்டி நீக்கினால்தான் அதை சாப்பிட்ட திருப்தியே பலருக்கும் உண்டாகும். ஆனால், ஆய்வுகள் மற்றும் மருத்துவர்கள் கருத்துப்படி மாம்பழத்தின் தோல் பகுதியில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்திருப்பதாகவும் பல நோய்களை தடுக்க உதவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. நுரையீரல், பெருங்குடல், மார்பகம், மூளை போன்ற பல வகையான புற்றுநோய்களுக்கு எதிராக நன்மை பயக்கும் என்று அறியப்படுகிறது.