பிரபல ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் பண்டிட் பிரபாகர் கரேக்கர், உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 80. கரேக்கர் புதன்கிழமை இரவு மகாராஷ்டிர மாநிலம் மும்பை சிவாஜி பார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாக குடும்பத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர். கோவாவில் பிறந்த கரேக்கர், "போலாவா விட்டல் பஹவா விட்டல்" மற்றும் "வக்ரதுண்ட் மஹாகே" போன்ற பாரம்பரிய பாடல்களின் இசையமைப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.