தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் கிராமம் உள்ளது. அப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சமுதாய கூடம் கட்டப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே செயல்பட்டது. தற்போது அந்த கட்டிடம், ஜன்னல்கள், பைப்லைன் உள்ளிட்டவை சேதமடைந்து பயன்பாடின்றி கிடக்கிறது. இதனை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.