தேனியில் வடிவேல் காமெடியை மிஞ்சும் அளவிற்கு சம்பவம் கறி தர மறுத்ததால் கடையின் முன்பு சடலத்தை போட்ட நபர்
தேனி பழனிசெட்டிப்பட்டியில் மணியரசன் என்பவர் கறிக்கடை வைத்துள்ளார். அவரது கடையில் சுடுகாட்டில் பணி புரியும் குமார் என்பவர் இலவசமாக கறி கேட்டு மிரட்டியுள்ளார். கறி தர மறுத்த நிலையில் அங்கிருந்து கிளம்பிச் சென்ற குமார் சிறிது நேரம் கழித்து புதைக்கப்பட்ட சடலம் ஒன்றை எடுத்து வந்து இறைச்சி கடையின் முன்பு போட்டு விட்டு தப்பி ஓடி உள்ளார். அதிர்ச்சி அடைந்த இறைச்சி கடை உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கைப்பற்றிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடிவேல் பட காமெடி போல் இச்சம்பவம் அமைந்துள்ளதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.