காலை உணவு விரிவாக்க திட்டம் துவக்கம்

59பார்த்தது
காலை உணவு விரிவாக்க திட்டம் துவக்கம்
போடிநாயக்கனூர் அருகே உப்பு கோட்டை கிராமத்தில் முதலமைச்சர் ஊரகப்பகுதி அரசு உதவி தேர்வு தொடக்கப்பள்ளி காலை உணவு விரிவாக்க திட்டத்தின் கீழ் இன்று காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
கர்மவீரர் காமராஜர் 122 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று முதல் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சஜீவனா தேனி பாராளுமன்ற தொகுதி எம்பி தங்க தமிழ் செல்வன் ஆகியோர் பங்கேற்று
காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர். தமிழகம் முழுவதும் இன்று தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஊரகப் பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்து தொடங்கப்பட்டது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் 122 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று முதல் தமிழக முழுவதும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்பு கோட்டை கிராமத்தில் காந்திஜி நினைவு ஆரம்பப் பள்ளியில் இன்று தமிழக முதல்வர் காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவன தலைமையில் நடைபெற்ற இந்த காலை உணவு திட்டத் தொடக்க விழாவில் தேனி பாராளுமன்ற தொகுதி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்றார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தது காணொளி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.

தொடர்புடைய செய்தி