இன்று பெரியகுளம் நகர் அதிமுக செயல் கூட்டத்திற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜுவை தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வரவேற்றனர். இந்நிகழ்வில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் தலைமையில் சார்பு அணி நிர்வாகிகள் மாவட்ட, நகர ஒன்றிய பேரூர் செயலாளர்கள் உடன் இருந்தனர்.