அரசு பேருந்து பொள்ளாச்சி கிளையில் பணிபுரிபவர் செல்லத்துரை. நேற்று கம்பம் டிரிப் வந்த இவர் அதுவரை கலெக்சன் ஆன பணத்துடன் கூடிய பையை பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு கழிவறை சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பெட்டி உடைக்கப்பட்டு ரூ. 10, 811 மற்றும் டிக்கெட்டுகள் களவு போயிருந்தது. கடைகளில் விசாரித்த போது கம்பத்தைச் சேர்ந்த காசிராஜன் பணப்பையை திருடியது தெரியவந்தது.