தேனி மாவட்டம், உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா்- ஞானாம்பிகை கோயிலில் ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் பெயா்ச்சியானதை அடுத்து சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
இதையடுத்து பிற்பகல் 4 மணிக்கு ராகு- சிம்ஹிகை தேவிக்கும், கேது- சித்ரலேகா தேவிக்கும் திருக்கல்யாண வைபமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கோயில் செயல் அலுவலா் இளஞ்செழியன், தக்காா் மாரிமுத்து, மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் ஜெயபாண்டியன், முன்னாள் அறங்காவலா் குழுத்தலைவா் ராமசாமி ஜெயரத்தினம்மாள் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதையடுத்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது