குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி மனு

74பார்த்தது
குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி மனு
தேனி மாவட்டம் கூடலூர் கிழக்கு பஜார் தெருவில் உள்ள குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருவதால் அந்நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் கூடலூர் நகர எஸ்டிபிஐ கட்சியினர் சார்பில் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கூடலூர் நகர்மன்ற தலைவர் பத்மாவதி லோகத்துரையிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தலைவர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி