உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட குமுளி பேருந்து நிலையத்தில் ரூ. 5. 50 கோடி மதிப்பீட்டில், பேருந்து நிலைய கட்டுமான பணி மற்றும் பணிமனை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை போக்குவரத்து துறை செயலாளர் பனீந்திர ரெட்டி நேற்று (ஜூலை. 26) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, போக்குவரத்து துறை மேலாண் இயக்குனர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.