சின்னமனூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுல்தான் பாஷா தலைமையில் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது, சின்னமனூர் டவுனில் பெட்ரோல் பங்க் அருகே கோட்டூரைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தார். இதனை கண்டபோலீசார் அவரை பிடித்து சோதனையிட்ட போது அவரிடமிருந்து 7 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. பின்னர் அவரை கைது செய்தனர்.