போக்சோ வழக்கில் இளைஞருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை

51பார்த்தது
போக்சோ வழக்கில் இளைஞருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை
தேனி மாவட்டம் போடி டி. வி. கே. கே. , நகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு கார்த்திக். இவர் 2022 அக். , 21ல் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் வீட்டிற்கு சென்றார். அத்துமீறி வீட்டில் நுழைந்து சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தார். அவரிடம் இருந்து தப்பிய சிறுமி கூலி வேலை முடிந்து வீடு திரும்பிய தாயிடம் கூறியுள்ளார். தாய், அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். கார்த்திக் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்த அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் காயத்திரி, வாலிபரை கைது செய்தார். இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ நீதி மன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் விவேகானந் தன் ஆஜரானார். நீதிபதி கணேசன், கார்த்திக்கிற்கு ஐந்தாண்டுகள் சிறை, மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி