திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா 2026ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். பக்தர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வந்த நிலையில், இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி இல்லை என்பது உறுதியாகியுள்ளது. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, 2026 மார்ச் 6ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறும். இதன்மூலம் திருக்கணித பஞ்சாங்கத்தின் படியான பெயர்ச்சியை பின்பற்ற தேவையில்லை.