பெண்ணை தீ வைத்து எரித்துக் கொன்ற பயங்கரம்

60பார்த்தது
பெண்ணை தீ வைத்து எரித்துக் கொன்ற பயங்கரம்
கேரளாவின் காசர்கோடு மாவட்டம் பெடகத்தில் பெண் ஒருவர் தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டார். நந்தகுமாரின் மனைவி ரமிதா (32) என்பவர் கடை நடத்தி வந்துள்ளார். அதே பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமாமிர்தம் (56). இவர் குடிபோதையில் ரமிதாவுக்கு தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து போலீசில் ரமிதா புகார் அளித்துள்ளார். ஆத்திரமடைந்த ராமாமிர்தம் கடந்த 8ஆம் தேதி கடைக்குள் சென்று தின்னர் ஊற்றி ரமிதா மீது தீ வைத்துள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அப்பெண் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி