தேனி சிவாஜி நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவர் மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால், அவரது மனைவி அவரை கண்டித்தார். அதனால் மனவேதனையில் அவர் கடந்த 18ம் தேதி தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு க. விலக்கு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். தேனி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.