தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அழகர்சாமிபுரத்தை சேர்ந்தவர் முத்து பாபு (23). இவர் கடந்த 24 ஆம் தேதி அன்று மூன்றாந் தல் பகுதியில் நடந்து சென்ற போது, சூர்யா என்பவர் கத்தியை காட்டி அவரிடம் செல்போனை பறித்து சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் சென்று கொண்டிருந்த முத்துபாபு, சூர்யா (26) என்பவரை பிடித்து தென்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.