தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் சார்பில் இன்று (அக். 1) போதைப்பொருள் மற்றும் மது ஒழிப்பு மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் காதர், மாவட்ட தலைவர் அபு பக்கர், மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.