விதைப்பு பணிகளில் தீவிரம் காட்டும் விவசாயிகள்

54பார்த்தது
பெரியகுளத்தைச் சுற்றியுள்ள தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, மேல்மங்கலம், கெங்குவார்பட்டி, ஜெயமங்களம் உள்ளிட்ட விவசாய நிலங்களில் மூன்றில் இரண்டு பகுதி நிலங்கள் மானாவாரி விவசாய நிலமாக உள்ளது. இவ்வாண்டு கடந்த சில தினங்களாக கோடை மழை அவ்வப்பொழுது பெய்து வந்த நிலையில் தற்பொழுது தென்மேற்கு பருவமழையும் பெய்யத் துவங்கி உள்ளதால் விதை விதைப்பு பணிகளை மானாவாரி விவசாயிகள் ஆர்வத்துடன் துவங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி