மகா கும்பமேளாவை உலகமே கண்டு வியந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மகா கும்பமேளாவில் பங்கேற்று, அதனை வெற்றியடையச் செய்த பக்தர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி. கும்பமேளாவின் முக்கிய விளைவு என்றால் அது ஒற்றுமை என்ற அமிர்தம்தான். நாட்டின் ஒற்றுமையால் கிடைத்த சக்தி, இந்தியாவின் அமைதியைக் குலைக்க நினைத்த அனைத்துச் சக்திகளையும் ஆட்டம்காண வைத்துவிட்டது. பிரயாக்ராஜில் அதைத்தான் ஒட்டுமொத்த நாடும் அனுபவித்தது என்றார்.