1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி வேலூர் கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக, இந்திய சிப்பாய்களால் நடத்தப்பட்ட வேலூர் புரட்சி தான் சுதந்திரத்திற்கு அடிக்கோலிட்ட முதல் கலகமாகும். திப்பு சுல்தானின் மகன்களை வேலூர் சிறையில் வைத்தது, மாட்டுத் தோல், பன்றி தோலால் செய்யப்பட்ட தலைப்பாகையை இந்து, முஸ்லிம் சிப்பாய்களுக்கு வழங்கியது போன்றவற்றால் கொந்தளித்த சிப்பாய்கள் கலகத்தை தொடங்கினர். ஆனால் இறுதியில் பிரிட்டிஷாரின் கையே மேலோங்கியது.