தலைகுப்புற கவிழ்ந்த வாகனம்.. உயிர் தப்பிய இன்ஸ்பெக்டர்

63பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை செஞ்சி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜி காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த காரின் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இன்ஸ்பெக்டர் சென்ற வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், ஓட்டுநர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்வாய்ப்பாக இன்ஸ்பெக்டர் விஜி சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி