சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் அரசு இடைநிலைப் பள்ளி உள்ளது. அங்கு, குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்து தரக்கோரி 7 வகுப்பு மாணவிகள், தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ண திரிபாதியிடம் கேட்டனர். அதற்கு, மாணவிகளை போய் சிறுநீரைக் குடிக்கும்விபடி கூறியுள்ளார். இந்த விவகாரம் அம்மாவட்ட ஆட்சியரிடம் சென்ற நிலையில் ராமகிருஷ்ண திரிபாதி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.