ஒரு கிராமத்தில், பெண் ஒருவர், வயலில் வேலை செய்து கொண்டிருந்த 7 அண்ணன்களுக்காக உணவு எடுத்து சென்று கொண்டிருந்தாள். அப்போது கருடன் பாம்பு ஒன்றை காலில் எடுத்துச் சென்றது. பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கவே, உணவில் விஷம் பட்டது. உணவை உண்ட 7 அண்ணன்களும் இறந்தனர். அந்த பெண் இறைவனை வேண்டி, நாக பஞ்சமி விரதம் இருந்து 7 சகோதரர்களையும் காப்பாற்றினார். அதுவே நாக பஞ்சமி விரதமாக மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.