ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் 'SK21' திரைப்படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் சிவாகார்த்திகேயன், முதல் முறையாக ராணுவ வீரராக நடிக்கிறார். அதற்கான டிரான்ஸ்ஃபர்மேஷன் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.