திருப்பூர் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டவர் பக்தர்கள் கனவில் வந்து குறிப்பால் உணர்த்தி அது சம்பந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைத்து வழிபடுவது என்பது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இதுவரை மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு என பல பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரம்பு மற்றும் கற்பூரம் வைத்து வழிபட உத்தரவானதைத் தொடர்ந்து பெட்டியில் கற்பூரம் மற்றும் பிரம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.