தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை 4 லட்சத்து 88,876 பள்ளி மாணவர்கள், 25,888 தனித்தேர்வர்கள், 272 கைதிகள் என 9 லட்சத்து 13,036 பேர் எழுத இருக்கின்றனர். இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் மார்ச் 14ம் தேதி மதியம் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் கடந்த பிப்ரவரி 14ம் தேதி வெளியானது.