அய்யர் மலையில் இயந்திர கோளாறால் பாதி வழியில் ரோப்கார் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரோப் கார் இயக்கும் இயந்திரத்தில் உள்ள சக்கரத்திலிருந்து கயிறு நழுவியதால் ரோப் கார் பாதியில் நின்றதுள்ளது. ரோப் கார் இருபுறங்களிலும் செல்ல முடியாமல் நடுவழியில் நின்றதால் பக்தர்கள் கூச்சலிட்டனர். பாதியில் நின்ற ரோப் காரில், 3 பெண் பக்தர்கள் வெகு நேரமாக தவித்து வரும் நிலையில், ரோப் கார் இயக்கத்தை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.