தமிழர்களுக்கான எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி - தயாரிப்பாளர் வாழ்த்து!

84பார்த்தது
தமிழர்களுக்கான எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி - தயாரிப்பாளர் வாழ்த்து!
தமிழர்களுக்கான எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி என குறிப்பிட்டு நடிகர் விஜய்க்கு இயக்குநரும், தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதும், அதில் வெற்றியை நோக்கிப் பயணிப்பதும் சிறந்த ஆளுமைகளுக்கானவோ அடையாளம். மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றதும் உடன் நிற்கும் குணமும், கல்விக்கான பாதையை வலிமையாக வலியுறுத்துவதும், தமிழர்களுக்கான எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறட்டும். கனவுகள் யாவும் நனவுகளாகட்டும். ஐம்பது நூறாக நலமுடன் வாழிய. வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி