சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்

78பார்த்தது
சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்
ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி ஹரியானா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை மத்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் வாக்காளர் திருத்தப் பணியை முடித்து இறுதிப் பட்டியலை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜூலை 1ம் தேதிக்குள் 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி