திருச்சூர் ஐஆர் பட்டாலியனைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி மீது கொச்சியைச் சேர்ந்த பெண் மருத்துவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி, திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த அதிகாரி, மருத்துவரை திருவனந்தபுரத்துக்கு வரவழைத்து, ஹோட்டலில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ள கூறிய நிலையில், தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாக அதிகாரி கூறியுள்ளார். இதுபற்றி பெண் மருத்துவர் புகாரளித்துள்ளார்.