அதிமுக தோற்றதால் காலை வெட்டிக்கொண்ட நபர்

568பார்த்தது
அதிமுக தோற்றதால் காலை வெட்டிக்கொண்ட நபர்
தூத்துக்குடி திரவியபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார். 1972 ஆம் ஆண்டு முதலே அதிமுக தொண்டராக இருந்துவரும் அவர், அப்பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் அதிமுக 30 இடங்களில் வெல்லும் என கூறியுள்ளார். அதற்கு திமுக தொண்டர் ஒருவர் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என கூறியுள்ளார். அப்படி நடந்தால் தனது காலை வெட்டிக்கொள்கிறேன் என செல்வகுமார் கூறியுள்ளார். அதே போல் அதிமுக தோல்வியடைந்ததும் தனது வலது காலை வெட்டிக்கொண்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை சசிகலா செல்ஃபோனில் அழைத்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி செல்வகுமாரை சேலத்திற்கு நேரில் அழைத்து நிதிஉதவி வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி