முன்னாள் இந்திய கேப்டனான சவுரவ் கங்குலி, ஆடவர் ஐசிசி தொடர்களின் இறுதி ஆட்டத்தில் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை கொண்டுள்ளார். 2000ஆம் ஆண்டு கென்யாவின் நைரோபியில் சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டம் நடந்தது. அதில், நியூசிலாந்துக்கு எதிராக கங்குலி 117 ரன்களை விளாசினார். இந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில், அடிக்கப்பட்ட தனிநபர் அதிகபட்ச ரன்கள் இதுவாகும். இன்றைய இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் சதம் விளாசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.