மாம்பழத்தில் உள்ள பல வகைகளில் ஒன்று தான் கிர் கேசர் (Gir Kesar). பிரகாசமான ஆரஞ்சு நிற பழச்சாற்றுக்காகப் பெயர் பெற்றது தான் கிர் கேசர் மா வகை. இந்த மாம்பழ ரகம் 1931-ம் ஆண்டில், குஜராத்தின் கிர்னார் மலையடிவாரத்தில் `ஜுனாகத் வசீர் சாலே பாய்’ என்பவரால் ஒட்டு ரகமாக உருவாக்கப்பட்டது. நார்ச்சத்து நிறைந்த இந்த மாம்பழம் செரிமான கோளாறுகளுக்கு தீர்வளிக்கிறது, மேலும் புற்றுநோயைக் குணமாக்கவும் பயன்படுவதாக கூறப்படுகிறது.