அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் இன்று (அக்., 24) இரண்டாவது நாளாக சோதனை நடக்கிறது. வைத்திலிங்கத்தின் தஞ்சையில் உள்ள வீடு, சென்னை எம்எல்ஏ குடியிறுப்பில் உள்ள அறை உள்ளிட்ட 6 இடங்களில் இன்று இரண்டாவது நாளாக அமலாக்த்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆட்சியில் அடுக்குமாடி குடியிறுப்பு கட்ட ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடக்கிறது.