தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 17-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும். வெப்ப நிலை, அதிக ஈரப்பதம் காரணமாக வெளியில் செல்வோருக்கு அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.