தமிழ்நாட்டின் புதிய பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு தமமுக தலைவர் ஜான் பாண்டியன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த முக்கியமான தருணத்தில், நயினாரின் இல்லத்திற்கு நேரில் சென்று, என் முழு ஆதரவையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்தேன். 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் இந்த நேரத்தில், நயினார் தலைமையில், என்டிஏ கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து மாபெரும் வெற்றி பெறுவோம் என்பது உறுதி என தெரிவித்துள்ளார்.