திருமணம் நடந்த சில மணி நேரத்தில் உயிரிழந்த மணமகன்

62பார்த்தது
திருமணம் நடந்த சில மணி நேரத்தில் உயிரிழந்த மணமகன்
சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியர் லோகேஷ் (40). இவருக்கும் திருச்சியை சேர்ந்த ராஜலட்சுமி(36) என்ற பெண்ணுக்கும் கடந்த 9ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. பின்னர் மணமகன் வீட்டில் இருவரும் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது லோகேஷ் வாய் மற்றும் மூக்கில் நுரை தள்ளி மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அவரை அனுமதித்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக ராஜலட்சுமியின் முன்னாள் கணவர் கொரோன காலத்தில் உயிரிழந்த நிலையில் இரண்டாவது கணவர் திருமணத்தன்றே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you