தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சித்து, ஆளுநர் ஆர்.என். ரவி அறிவிக்கை வெளியிட்டார். இதுகுறித்து, செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆளுநர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். அவர் சொன்னது சரியே. ஆனால், ஆளுநர் அந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்” என்றார். ஆளுநர் வெளியிட்ட அறிக்கையில், “முதலமைச்சருக்கு ஆணவம் நல்லதல்ல” என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.